ஆஸ்திரேலியாவில் படுத்த படுக்கையாக சத்குரு ஜக்கிவாசுதேவ்! தீவிர சிகிச்சை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ஜக்கி வாசுதேவ் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகியுள்ளது அவரது பக்தர்களை அதிர வைத்துள்ளது.


பல்வேறு யோகா மற்றும் வேறு சில நிகழ்வுகளில் பங்கேற்க ஜக்கி வாசுதேவ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் பங்கேற்பதாக இருந்த ஒரு சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது ஜக்கி வாசுதேவுக்கு உடல் நிலை சரியில்லை என்று தகவல் கிடைத்தது. இதனால் அவரது பக்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் கடந்த காலங்களில் உடல் நிலையை காரணம் காட்டி ஜக்கி வாசுதேவ் எந்த நிகழ்ச்சியையும் ரத்து செய்தது இல்லை. இதனால் அவரது உடலுக்கு என்ன ஆனது என்று பலரும் பதற்றம் அடைந்தனர். இதனை சமாளிக்க உடனடியாக ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் உடனடியாக ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு ஆஸ்திரேலிய ஹேய் பீவர் என்று கூறப்படக்கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் சிறிது ஓய்வில் இருப்பதாகவும் ஆனால் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தான் கூறியபடி பங்கேற்க உள்ளதாகவும் ஜக்கி தெரிவித்துள்ளார். இது போன்ற காய்ச்சல்கள் மற்றும் உடல் உபாதைகள் தன்னை முடக்கிவிடாது என்றும் தனது பக்தர்களுக்கு சத்குரு நம்பிக்கை அளித்துள்ளார்.

இருந்தாலும் ஜக்கி வாசுதேவுக்கு ஏற்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஹேய் பீவர் என்பது அந்நாட்டில் பலருக்கும் ஏற்படக்கூடியது என்கிறார்கள். விலங்குகள், தூசி போன்றவற்றின் அலர்ஜியால் ஏற்படக்கூடிய இந்த காய்ச்சலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். இருந்தாலும் ஜக்கி வாசுதேவுகுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரது பக்தர்களும் வேண்டுதலை தொடங்கியுள்ளனர்.