சபரீசன் பதவி வேட்டை! ஸ்டாலினை போட்டுத்தாக்கும் ஜெயகுமார்! விரட்டியடிக்கும் தமிழிசை!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை ஸ்டாலின் சந்தித்துப் பேசியதை தி.மு.க.வினரே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான், ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார், ஐந்து மந்திரி பதவி கேட்கிறார் என்று சொன்னார்.


இந்த விவகாரம் அறிந்து காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்த அளவுக்கு தி.மு.க.வினர் டென்ஷன் ஆகவில்லை. காரணம், ஏற்கெனவே ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் டேரா போட்டு பல்வேறு பா.ஜ.க. பிரமுகர்களை சந்தித்து வருகிறார் என்பது அவர்களுக்கும் தெரியும்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியுடன் ஸ்டாலினே நேரடியாக பேசி வருகிறார். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்றுதான் உறுதி கொடுக்கிறார். அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரியவருவதால், மாற்று ஏற்பாட்டிற்கும் தயாராக இருக்கிறார்.

அதற்காகத்தான் டெல்லிக்கு மருமகனை அனுப்பி பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். இந்த நிலையில்தான் சந்திரசேகர்ராவ், சந்திப்பதற்கு ஸ்டாலின் விருப்பம் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு தரப்புக்குமே மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால், மூன்றாவது அணிக்குத்தான் வாய்ப்பு என்று செய்தி பரவவே, சந்திரசேகர ராவை சந்தித்துவிட்டார்.

எப்படியும் டெல்லி ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்று ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த நிலையில்தான் சபரீசன் டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தையை ஜெயக்குமார் கசிய விட்டார். அது உண்மைதான் என்று தமிழிசை செளந்தர்ராஜனும் உறுதி அளித்திருக்கிறார்.

அதாவது பதவிக்காக எதுவும் செய்ய தயார் என்பதைத்தான் ஜெயக்குமார் அம்பலப்படுத்த, தமிழிசை கிழித்து தொங்கவிட்டிருக்கிறார். அது சரி, ஸ்டாலின் என்ன அவருக்காகவா மந்திரி பதவி கேட்கப் போகிறார். தமிழக மக்கள் நலனுக்காக எந்த ஆட்சி வந்தாலும், அதில் மந்திரியாக அமர்வோம் என்றால் தப்பா..?