சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், காப்பியடித்து எழுதப்பட்டதா..? எழுத்துலக சர்ச்சை!

காவல்கோட்டம் என்கிற ஒரே நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் சு.வெங்கடேசன்.


காவல்கோட்டம் என்கிற ஒரே நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் சு.வெங்கடேசன்.இப்போது பாராளுமன்ற உறுப்பினராகி பிஜேபி அரசை நோக்கி அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.இந்த நேரத்தில் அவரைப் பார்த்து ஒரு சூடான கேள்வி இணையத்தில் கேட்கப்படுகிறது.விகடனில் தொடராக வந்த அவரது அடுத்த நாவலான வீரயுகநாயகன் காப்பியா என்பதே அது?

சென்னை பச்சையப்பா கல்லூரி துணைப் பேராசிரியராக 1950களில் பணியாற்றியவர் அ.மு.பரமசிவானந்தம்.இவர் எழுதி டியூகோ பதிப்பகம் வெளியிட்ட ' வேள்பாரி ' என்கிற நூலை எடுத்து பட்டி,டிங்க்கரிங் செய்து ' வீரயுக நாயகன் வேல்பாரி' ஆக்கிவிட்டார் வெங்கடேசன் என்பது குற்றச்சாட்டு.அ.மு.பரமசிவானந்தம் நூல்களின் மிக நீண்ட பட்டியல் இணையத்தில் இருக்கிறது.

அதில் வேள்பாரி என்கிற நூலும் இருக்கிறது. ஆனால் அது நாடக வடிவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. நாட்டுடமை ஆக்கப்பட்டு விட்ட அ.மு.பரமசிவானந்தம் நூல்களில் அந்த நூல் உட்பட எதுவும்  சமீபத்தில் மறுபதிப்பு வந்ததாகத் தெரியவில்லை.குற்றச்சாட்டு குறித்து சு.வெங்கடேசன் தரப்பில் இருந்து இதுவரை பதில் ஏதும் இல்லை.அதுதான்,இந்தச் செய்தியை பரபரப்பாக்குகிறது.