நான் ஓரினச்சேர்க்கையாளன்! காரணம் ஆப்பிள் ஐ போன்! நீதிமன்றம் சென்ற விபரீத இளைஞன்! அதிர்ச்சி காரணம்!

ஆப்பிள் ஃபோன் என்னை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றிவிட்டது என ரஷ்ய நபர் வழக்கு


மாஸ்கோ: நான் ஓரினச் சேர்க்கையாளராக மாற ஆப்பிள் ஃபோன்தான் காரணம் எனக் கூறி, ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் பரபரப்பு புகார் கிளப்பியுள்ளார்.  

இதுதொடர்பாக, AFP வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட நபர் செப்டம்பர் 20ம் தேதி மாஸ்கோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாகவும், இதுபற்றிய விசாரணை அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தி வரும் அந்த நபர், சில மாதங்களுக்கு முன்பாக, பிட்காயின் ஆர்டர் செய்ததாகவும், ஆனால் தவறுதலாக, அவருக்கு GayCoin விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.  

குறிப்பிட்ட காயின் கிடைத்த நாள் முதலாக, படிப்படியாக, ஓரினச்சேர்க்கை பற்றி யோசிக்க தொடங்கிய அந்த நபர், ஒருகட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளராகவே மாறிவிட்டாராம். தற்போது அவருக்கு ஒரு காதலன் உள்ள நிலையில், இந்த உறவை தனது பெற்றோர்களிடம் எடுத்துக் கூற முடியாமல் திண்டாடி வருகிறாராம்.

இதற்கெல்லாம் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோனின் தவறான வழிகாட்டுதல்தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அவர், இதற்காக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாகக் கோரியுள்ளார். அவர் சார்பாக, சாபிஸத் குஸ்னீவா என்பவர் வழக்கறிஞராக ஆஜராக உள்ளார். இந்த விவகாரம் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.