மூச்சுவிட முடியவில்லை! ஹாஸ்பிடலில் சேர்ந்த பெண்! வயிற்றுக்குள் இருந்த 25கிலோ மர்ம பொருள்! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்கள்!

ரஷ்யாவில் மூச்சு விட முடியாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ராட்சத கட்டி ஒன்று வளர்ந்திருப்பதை கண்டு பிடித்து அறுவைச்சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அதனை அகற்றியுள்ளனர்.


ரஷ்யாவைச் சேர்ந்த 59 வயதான பெண்ணொருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயிற்றுவலி குணமாக மருத்துவமனைகளுக்குச் சென்று அவர்கள் கூறும் மருந்துகளை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு படுக்கைக்குச் செல்லும் போது அப்பெண்ணிற்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு அதன் காரணமாக மூச்சு விட முடியாமல் இருந்துள்ளது. இந்நிலையில் உடனே அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது அது என்னவென்றால் அவரது வயிற்றில் ஒரு ராட்சத கட்டி வளர்ந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இந்நிலையில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என அப்பெண்ணின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.  

அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது அவரது வயிற்றில் இருந்த 25 கிலோ எடையுள்ள ராட்சத கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் தெரிவித்ததாவது இந்த ராட்சத கட்டியானது இப்பெண்ணின் உடலில் பல ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது.

சாதாரண வயிற்று வலி என மருந்து மாத்திரைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கட்டி வளர்ந்து தற்போது குடல் வயிறு முதலான உறுப்புகளை அழுத்துவதால் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மூச்சுக் குழலையும் அழுத்துவதால் மூச்சு விட முடியாமல் இருந்துள்ளது என தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அப்பெண் நலமுடன் இருக்கிறார் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.