ரஷ்ய நாட்டில் சிறுவன் ஒருவன் வீட்டின் வெளியே உள்ள ஜன்னல் கம்பியில் மீது உயிருக்கு போராடிய நிலையில் உள்ளான் இந்நிலையில் அதை பார்த்த இரண்டு இளைஞர்கள் அச்சிறுவனை சாதுரியமாக காப்பாற்றியுள்ளனர்.
6வது மாடி! கழிவறை ஜன்னல்! விவகாரமாக சிக்கிய சிறுவன்! ஹீரோவாக மாறிய இளைஞர்கள்!
ரஷ்யாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 6 வயது சிறுவன் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளான் இதையடுத்து எதிர்பாராத விதமாக கழிப்பறையும் கதவு வெளியே பூட்டிக் கொண்டது.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த சிறுவன் சத்தம் போட்டு பார்த்தும் யாரும் கதவைத் திறந்து விடாத நிலையில் கழிவறையில் உள்ள ஜன்னல் வழியே வெளியே வர முயற்சித்துள்ளான்.
அப்போது ஜன்னல் வழியே வெளிவரும் போது வெளியே உள்ள இரு கம்பிகளின் மேல் காலை வைத்து உயிருக்கு பயந்து அழுதுள்ளான். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்ட நிலையில் அந்த வழியே சென்ற இரு நபர்கள் சிறுவன் அழுவதை பார்த்து உடனே அச்சிறுவனை காப்பாற்ற முடிவு செய்தனர்.
இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேலே சென்று ஜன்னல் வழியே அவர்கள் இருவரும் அக்குழந்தையை தைரியமாக காப்பாற்றியுள்ளனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த இளைஞர்களின் துணிச்சலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.