வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பெண்கள்! தொழில் அதிபர்களை குறி வைக்கும் நூதன விபச்சாரம்! கண்டுபிடித்த போலீஸ்!

இலங்கை கொழும்புவில் சட்டவிரோதமாக விபச்சார தொழில் செய்து வந்த ரஷ்ய மற்றும் சீன பெண்கள் மூவரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.


இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண்கள் குழம்பு சுற்றுலா தலங்களில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர்.

இந்நிலையில் கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதி ஒன்றை புலனாய்வுத்துறையினர் கண்காணித்து வந்தனர் அங்கு அவர்களுக்கு விபச்சாரத் தொழில் நடப்பதாக தகவல் வந்ததையடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுத் துறையினர் ஒரு நபரை கண்காணிக்க அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர் அவர் கொடுத்த தகவலின்படி புலனாய்வுத்துறையினர் அந்த விடுதிக்கு சென்று அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தள்ளவர்களை கைது செய்தனர். அதில் 40 வயது மதிக்கத்தக்க ரசிய நாட்டு பெண் ஒருவரும் 25 வயது மதிக்கத்தக்க சீனப் பெண்கள் இருவரையும் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில் அவர்கள் தெரிவித்ததாவது வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருபவர்கள் புதிதாக எந்த ஒரு துறையிலும் தொடங்க அந்த அரசு அனுமதிப்பதில்லை அதனால்தான் இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பெண்கள் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் அங்குள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.