சினிமாவை மிஞ்சும் சேசிங்! துப்பாக்கி சண்டை! பட்டப் பகலில் நட்டநடு ரோட்டில் சம்பவம்!

நொய்டா: சினிமா படங்களில் வருவது போல ஓடும் காரில் மாறி மாறி துப்பாக்கிச் சண்டையிட்ட நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வே சாலையில் கடந்த ஜூன் 11ம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வைரல் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெள்ளை மற்றும்  கிரே நிற கார்களில் சென்ற நபர்கள் திடீரென ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனை அவ்வழியே வந்த பாதசாரிகள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒருவர், இதனை வீடியோவாக படம்பிடித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதன்பேரில், நொய்டா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால், சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சில இளைஞர்கள் இத்தகைய செயலை செய்துள்ளனர்.

இது ஒரு டம்மி துப்பாக்கி சண்டை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.