நாங்குநேரியில் ரூபி மனோகரன் வேட்பாளரான கதை இதுதானாம்..! எல்லாம் வசந்தகுமார் லீலைதான்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் நிற்கும் என்று சொன்னதுமே பேரம் துவங்கிவிட்டது.


25 கோடி செலவழித்தால்தான் அதிமுகவை எதிர் கொள்ள முடியும் என்று உட்கட்சிக்காரர்களே கிளப்பி விட்ட வதந்திதான் அந்த பேரத்திற்கான முதல் அடி.அந்த அடியை தாங்க முடியாமல் வெள்யே வந்த அரை டசன் உள்ளூர் காங்கிரஸ் குருந்தலைகள் தமிழ்செல்வன் தலைமையில் வீட்டு வாசலில் கருப்புக் கொடி கட்டியதுமே ஆட்டம் சூடு பிடித்து விட்டது.

டெல்லிக்கு அழகிரி எடுத்துப் போன லிஸ்ட்டில் மூன்றே பெயர்கள்தான்.அவர்கள் மூன்று பேருக்கும் இரண்டு முக்கிய ஒற்றுமைகள் இருந்தன.காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகிய அந்த மூவரும் ஒரே ஜாதிக்காரர்கள்,மூவருமே நாங்குநேரி முன்னாள் எம்.எ.ஏ வசந்த குமாருக்கு உறவினர்கள்.

குமரி அனந்தன் ஆர்வம் காட்டாததால் ஊர்வசி அமிர்தராஜ் ,ரூபி மனோகரன் இடையேதான் என்று ஆகிவிட்டது.ஊர்வசி மனோகரன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மைச் செயலாளர்களில் ஒருவர்.இவரது தந்தை செல்வராஜ் ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.காசுக்குப் பஞ்சமில்லை,ஆனால்,எம்.எல்.ஏ ஆனாலும் பதவிக்காலம் ஒன்னரை ஆண்டுதான்.18 மாதப் பதவிக்கு 25 லட்சமா என்று அவரது உறவினர்கள் பேசித் தடுத்துவிட்டனர்.அதனால் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும்,ஹெச்.வசந்த குமாரின் சம்பந்தியுமான ரூபி மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ரூபி மனோகரன் காஞ்சிபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்.காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழகமெங்கும் 94 குளங்களைத் தூர் வாரப்போவதாக அறிவித்தது போல அவ்வப்போது பத்திரிகைகளில் தன் பெயர் அடிபடுவது போல பார்த்துக்கொள்ளக் கூடியவர்.ஆனாலும் நாங்குநேரியில் ஒரு டஜன் அமைச்சர்கள் களமிறங்கப் போவதால் போட்டி கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.