கொல்கத்தாவை கதற வைத்த கோஹ்லி, டி வில்லியர்ஸ்! பதிலடி கொடுப்பாரா ரஸ்ஸல்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபாரமாக விளையாடி 205 ரன்களை எடுத்துள்ளது.


முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்திவ் படேல் மற்றும் கோஹ்லி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். பார்திவ் படேல் 25 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் கோஹ்லியுடன் டீ வில்லியர்ஸ் இணைந்தார். இவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர்.  எதிரணியின் பந்து வீச்சாளர்களால் இவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.

சிறப்பாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 49 பந்துகளில் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டீ  வில்லியர்ஸும் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார் .

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205  ரன்களை எடுத்தது. RCB கடைசி 4 போட்டிகளில் தோல்வியை தழுவினாலும் இன்றைய போட்டியில் அவர்கள் ஆடிய விதம் கண்டிப்பாக வெற்றிக்கு போராடும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.