ஏழைத்தாயின் மகன் இப்படி தான் செய்வாரா?செல்லும் வழியெல்லாம் ரோஜா இதழ் குளியல்!

இந்தியாவின் ஏழை அரசியல்வாதி என்று தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொள்வார் நரேந்திர மோடி. ஏழைத்தாயின் புதல்வன் என்று சொல்லிக்கொள்ளும் மோடிக்காக செய்யப்படும் வீண் செலவு ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டு இருக்கிறது.


நரேந்திரமோடி பிரசாரத்துக்குப் போகும் இடங்களில், அவர் நடக்கும்போது ரோஜா இதழ்கள் தூவுவதும், அவர் நடக்கும் பாதைகளில் ரோஜா இதழ்களால் பாதை போடப்படுவதும் வழக்கம். இது அந்தந்தப் பகுதி கட்சித் தொண்டர்களால் ஏற்பாடு செய்யப்படுவது இல்லையாம்.

இதற்கென ஒரு வேன், மோடி செல்லும் இடமெல்லாம் வருகிறதாம். அந்த வேன் நிறைய எப்போதும் ரோஜா இதழ்கள் அடங்கிய பூ மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாம். அந்த பூக்களைத்தான் அவர் போகும் இடமெல்லாம் தூவுகிறார்களாம்.

அடேங்கப்பா, அரசியல்னு வந்துட்டா என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு..?