நம்ம சின்னம்மாவை சிக்கவைத்த ரூபா நடிகை ஆயிட்டாங்க! சூப்பரம்மா!

ஜெயலலிதாவின் தோழியாகி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் சசிகலா.


அவர் , சிறையில் இருந்து சுதந்திரமாக வெளியே போய் பெங்களூர்  கடைவீதியில் ஷாப்பிங் செய்து விட்டு வந்ததாக படங்களுடன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு தமிழ் நாடு கர்நாடகாவை மட்டுமல்லாமல் இந்தியாவையே அதிர வைத்தவர், ரூபா முட்கில் ஐபிஎஸ். அவர் அடுத்ததாக சினிமாவில் நுழைய போகிறார்,நடிகையாக அல்ல பாடகியாக.

சிறுவயதில் இந்துஸ்தானி சங்கீதம் கற்ற ரூபா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடுவதைப் பார்த்தார் பரகூர் ராமசந்திரப்பா என்கிற கன்னட திரைப்பட இயக்குநர்.அவர் ரூபாவை அனுகி தனது அடுத்த படமாமான பேயல தாதா பீமண்னா படத்துக்காக ஷமித்தா மல்நாட் இசையமைத்த ' கெம்பனே சூர்யா' என்கிற பாடலை பாட முடியுமா என்று கேட்டாராம்.

அது டூயட் பாட்டல்ல ஒரு கிராம வாசியின் எளிய ஒரு தினம் பற்றிய பாடல் என்பதால் பாட ஒப்புக்கொண்டாராம்.யதுகிரி மாவட்டத்தில் பணியாற்றிய போது இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்ட ரூபா 2018 ம் ஆண்டு மகளிர் தினத்தன்று தான் பாடிய ஒரு ஆல்பமும் வெளியிட்டு இருக்கிறார்.

கர்நாடகாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபாவிற்கு எஸ்.ஜானகி,வானிஜெயராம்,ஆஷா போன்ஸ்லே,லதா மங்கேஷ்கர், ஸ்ரேயா கோஷல் பாட்டுக்கள் விருப்பமாம்.17 வருடத்தில் 41 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருக்கும் ரூபா இப்போது ரயில்வே போலீஸ் ஐ.ஜியாக இருக்கிறார்.தொடர்ந்து பாடப்போவதாக அறிவித்திருக்கும் ரூபா ஐ.பி.எஸ்ஸின் பாடல்களை, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கன்னடம் கற்றுவரும் சசிகலா கேட்பாரா?