நம்ப வைத்து ஏமாற்றிய ஜெகன்! குலுங்கி குலுங்கி ஏங்கும் ரோஜா!

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


அப்போது அவருடன் 5 துணை முதல்- மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம் ஆகிய சமூகத்தில் இருந்து ஒருவர் என்று 5 பேர் துணை முதல்வர்களாக  இன்று பதவியேற்றனர்.

இந்த விழாவில் பெருதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவியோ, அமைச்சர் பதவியோ கொடுக்கப்படவில்லை என்பதுதான் பலருக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், எத்தனையோ பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் ஜெகன்மோகனை விட்டு பிரிந்த நேரத்திலும், பிரச்னைக்குரிய நேரத்திலும் அவருக்கு பக்கபலமாக நின்றவர் நடிகை ரோஜா.

ஜெகன்மோகனுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஏகப்பட்ட அவமானங்களையும், அவமதிப்புகளையும் சந்தித்தவர். அதனால் அவருக்கு ஒரு பதவி நிச்சயம் என்ற எண்ணமே இன்று பலருக்கும் இருந்தது. ஆனால், அவருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு இருக்கிறது. ஆனால், ஜெகன் மோகன் வட்டாரம் இதனையும் மறுக்கிறது. ஆக, ரோஜா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு அடுத்து ரோஜா அரசியலில் நல்ல பதவிக்கு வருவார் என்று எதிர்பார்த்த தமிழர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தந்துவிட்டார் ஜெகன்.