உச்சகட்டத்தில் விராட் கோலி – ரோஹித் ஷர்மா மோதல்! காரணம் அனுஷ்கா ஷர்மாவா?

மும்பை: இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை, சக கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா அன்ஃபாலோ செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக உள்ள விராட் கோலிக்கும், துணை கேப்டனாக உள்ள ரோஹித் சர்மாவுக்கும் இடையே கடும் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே கருத்து மோதல் உள்ளதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்வதாக, ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

இத்தோடு நிற்காமல், விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவையும் அன்ஃபாலோ செய்துவிட்டதாக, தற்போது ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதேசமயம், விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும், இன்னமும் ரோஹித் மற்றும் அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். 

ஆனால், ரோஹித்திற்கு பதில் தரும் வகையில், அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பொய்தான் கூத்தாடும், உண்மை எப்போதும் அமைதியாகவே செயல்படும் என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் முழுக்க, விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விராட் கோலி உடனடியாக விளக்கம் அளித்து, இந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.