பாகிஸ்தானுடன் சச்சினால் கூட முடியாதது! சாதித்துக் காட்டிய ரோஹித் ஷர்மா!

உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சினால் கூட முடியாததை ரோஹித் ஷர்மா சாதித்துள்ளார்.


இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உலக கோப்பை போட்டி பரபரப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அசத்தலாக ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா அதிரடி சதம் அடித்தார்.

இதன் மூலம் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை ரோஹித்பெற்றுள்ளார். கடந்த 2015 உலக கோப்பையில் விராட் கோலி சதம் அடித்தார்.

அதற்கு முன்பாக 1992 முதல் 2015 வரை சயீத் அன்வர் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சதம் அடித்துள்ளார். அந்த சாதனையை கடந்த உலக கோப்பையில் கோலி சமன் செய்தார். தற்போது ரோஹித் சதம் அடித்துள்ளார்.

இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அதிக சதம் அடித்த அணி எனும் பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. மேலும் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானிற்கு எதிராக சச்சின் 5 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஆனால் ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. ஆனால் ரோஹித் ஷர்மா தற்போது சதம் அடித்துள்ளதன் மூலம் சச்சினால் கூட முடியாததை ரோஹித் செய்துள்ளார் என்றுரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.