விடை பெற்றார் ராபின்சன் பூங்காவின் கடைசி தோழர்..! பேராசிரியர் அன்பழகனின் நெகிழ வைத்த வாழ்க்கை..! என்ன தெரியுமா?

விடை பெற்றார் ராபின்சன் பூங்காவின் கடைசி தோழர்.. அன்று ஒரு நாள் அந்த பூங்கா முழுவதும் புரட்சி மழை வெளுத்து வாங்கியது.


அதர்மத்தை ஒழித்து.சமதர்மத்தை நிலைநாட்ட . ராபின்சன் பூங்காவை நோக்கி தொடங்கிய திராவிட பயணத்தை வேர் விட்டு செழிக்கச் செய்தவர் இந்த அன்பழன். அவர் இணைந்து அமைத்த திமுக கழகம் எனும் பூங்காவையும். அதில் பூத்துக் குலுங்கும் திராவிட மலர்களும், எதிர்கால காய்கள், கடந்த கால கனிகள் என திராவிடத்தின் எழுச்சியை மலர்ச்சியாக வெளிக்கொணர்ந்த புரட்சிகர போராளி இந்த இளைஞர் அன்பழன் என்று தான் வரலாறு எழுதி வந்துள்ளது.

தன் பேச்சுத் திறமையால் கல்லூரிகளில் தமிழை வளர்த்தது போல. கழகத்தை வளர்க்க திராவிட திறமையை வளர்த்துக்கொண்டார் இந்த இளைஞர். காஞ்சியின் காவலன் அண்ணாவால் 1949ம் வருடம் செப்டம்பர் 17-ம் தேதி உயிர்ப்பெற்ற இந்த கழகத்தின் ஒப்பற்ற . அரசியல் பயணத்தில் அன்பாக பழகியதால் பேரறிவன் அன்பழன் என அழைக்கப்பட்டார் இவர். தமிழகத்தின் வீதி தோறும் சுயமரியாதைக்காக முழக்கமிட்ட ஆளுமையின் உருவம் இந்த அன்பழன். 

மழை பலமாகப் பெய்துகொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும். சங்கடமான நிலைதான். விடாது மழை பெய்கிறது. அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர். மழையில் நின்றுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடம்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இது போன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கிடந்தன.

சங்கடமான நிலை ஏற்பட்டது. சரி செய்தோம் என்று அண்ணா பேசிய உரையில் சிக்கிப்போய். தமிழ்ப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் தான் இந்த அன்பழன். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமாக மாறினாலும் வாழ்நாளின் இறுதி வரை தன்னுடைய அறிவாசானாக இவர் ஏற்றுக் கொண்டது பகலவன் பெரியாரை மட்டுமே.

கொட்டும் மழையில் துளிர்விட்டு இன்று ஆலமரமாக வேர்விட்டு வளர்ந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணி வேராக வலம் வந்தவர் பேராசிரியர் அன்பழன். திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான்.

திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு கலைஞருடன் இணைந்து உயிர்கொடுத்தவர் பேராசிரியர் அன்பழகன்.

மனுதர்மம் என்பது மனிதனை சாக்கடையாக்கும் என்று கூறி. கல்வியறிவு பெற ஊர் தோறும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நூலகங்களை சொந்த கட்டிடத்தில் இயங்க வழிவகுத்த பகுத்தறிவு பகலவன் இந்த அன்பழன். பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போராடி எனக்கான உரிமையை பெற்றெடுத்த அறிவாசான் இந்த அன்பழன்.

 கீழப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கிஅண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் வரையிலும் தன்னுயிர் தந்திட. புரட்சி நெருப்பினை பற்ற வைத்த பழம்பெரும் போராளி இந்த அன்பழன். ஆண்டுகள் பல ஆனாலும் அண்ணாவிற்கு பிறகு கலைஞர் தான் தலைவர் என போர்க்கொடி தூக்கி கலைஞரை அரியணையில் ஏற்றிய ஆசான் தான் இந்த அன்பழன்.

சட்டமன்ற நாடாளுமன்ற பதவிகளை விட. திராவிட மன்ற பதவியை தன்னுயுருக்கு இணையாக கருதி செயல்பட்டவர் இந்த அன்பழன். பேச்சிலும் செயலிலும் தீப்பொறி பறக்க சித்தாந்தம் பேசி. கழக பொதுச்செயலாளராக வலம் வந்த இந்த ஆறடி சிங்கம். தன்னுயிர் நண்பனைக் காண தவம் கிடந்து போய்விட்டார்.

ராபின்சன் பூங்காவில் பூத்த மலர்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தாலும். எண்ணற்ற பல புதிய விதைகளை ஊற்றிவிட்டு சென்றுள்ளன. அந்த வகையில் தலைவர் கலைஞர் விதைத்த திராவிட விதை இன்று மற்றுமொரு ஆலமரமாய் வானுயர வளர்ந்து தென்னிந்தியாவை தலைநிமிர செய்துள்ளது.

அந்த தலைவரின் தன்னம்பிக்கையாக. தலைவருக்கு தலை மகனாக. கலைஞரின் கைப்பொருளாக. கழகத்தின் காவலனாக. இன்னமும் எண்ணற்ற கருப்பொருளாக உயிர்ப்புடன் செயல்பட்ட ராபின்சன் பூங்காவின் கடைசி தோழர் பேராசிரியர் அன்பழகன் இன்று தன் இன்னுயிர் நண்பரையும். தானைத் தலைவனையும். பகுத்தறிவு பகலவனையும் காணும் ஆவலில் நம்மை விட்டு பிரிந்துள்ளார்.

மக்கள் பூங்காவில் மலராக பூத்துள்ளார். அறிவு ஆற்றலில் ஆசானாக வளர்ந்துள்ளார். தொண்டர் உள்ளங்களில் அறிஞராக விளங்கி உள்ளார். துடிப்பான பொதுச்செயலாளராக விழிப்புடன் போய் வருகிறார். கனி பறிக்க மரம் ஏறும்போது கருநாகம் காலைச்சுற்றிக் கொள்வதைப்போல கழகம் வளர்ந்து விருட்சமாக மாறும் இந்த வேளையில். கழகத்தின் காவலனாக இருந்த பேராசிரியர் காலனுக்கு கைகூப்பி சென்றதேனோ.

கடவுள் பற்று உள்ளோரெல்லாம் பாதியிலே சென்று விட. மறுத்து வெறுத்த கழகத்தார் 98 வரை வாழ்ந்ததெல்லாம் சரித்திரம் கூறும். இந்த பூங்கா இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது. அண்ணா. கலைஞர். நெடுஞ்செழியன்,அன்பழகன்.அன்பில் போன்ற திராவிட வேங்கைகள் மீண்டும் வந்து புரட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்று.

மணியன் கலியமூர்த்தி