கசந்துபோன ஓரின காதல்..! விண்வெளி ஆய்வு மையத்தில் திருட்டு விவகாரம்!

விண்வெளியில் இருந்து இன்னொருவரின் வங்கிக் கணக்கில் கை வைத்த விவகாரம் வெளியில் தெரிந்ததை அடுத்து நாசா வித்தியாசமான இந்த குற்றத்தை விசாரிக்கத் தொடங்கி உள்ளது.


மெக்லைன் என்ற விண்வெளி வீராங்கனை ஓரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர். இவர் சம்மர் வார்டர் என்ற பெண்ணை மணந்து கொண்டு 2014ம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கிடையேயான ஓரினசேர்க்கையில் டீசன்ட்டாக சொல்ல வேண்டும் என்றால் உடல் உறவில் மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த வருடம் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதன் பின்னர் மெக்லைன் தனது ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மெக்லைன் தன்னுடைய வங்கிப் பணத்தை திருடிவிட்டதாக அவருடன் வாழ்ந்த பெண்ணான சம்மர் வார்டன் புகார் அளித்துள்ளார்.  

இந்த புகாரில் கவனிக்க வேண்டிய விஷயம் சம்மர் வார்டன் பணத்தை மெக்லைன் கம்ப்யூட்டர் சென்டரில் இருந்தோ, வெளியூரில் இருந்தோ, அல்லது வெளிநாட்டில் இருந்தோ திருடவில்லை. ராக்கெட்டுகள் தொடர்பான பணியை மேற்கொள்ளும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து என்பதுதான்.

இந்த விஷயம் குறித்து சம்மர் வார்டன் அளித்த புகாரில் நாசா முதல் முறையாக இதுபோன்ற வழக்கை எதிர்கொண்டதுடன் மெக்லைனிடம் விசாரித்து உள்ளது. அதற்கு அவர் பணம் எதுவும் திருடவில்லை என்றும் சம்மர் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தது என மட்டுமே பார்த்ததாகவும் கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும் அடுத்தவரின் பிரைவசியை பாதிக்கும் செயல்தானே இது.

மேலும் இந்த வங்கிக் கணக்கு சம்மர் வார்டனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இருவரும் ஒட்டி உறவாடி பிண்ணியபடி வாழ்ந்து வந்தபோது தொடங்கப்பட்ட ஜாயின்ட் அக்கவுண்ட் ஆகும். அந்த வங்கிக் கணக்கை பயன்படுத்த இருவருக்குமே உரிமை உள்ளது. இருவரிடமும் விசாரணை நடத்தியபின் மெக்லைன் குற்றவாளி என நாசா புலனாய்வாளர்கள் உறுதி செய்தால் விண்வெளியில் நடைபெற்ற முதல் குற்றம் என்ற பெருமை அந்த நாட்டிற்கு செல்லும்.

இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்ற நாடுகளை மிஞ்சும் வகையில் ராக்கெட்டுகளை விடலாமா, நிலவு உள்பட மற்ற கிரகங்களில் ஆய்வு செய்ய சந்திராயன் 3, 4 என அனுப்பி அறிவியலை வளர்க்கலாமா என்று யோசித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மேற்கண்ட வழக்கில் விஞ்ஞானிகளுடைய செயல் விஷச் செய்தி போல பரவி வருகிறது.