முழுக்க முழுக்க சுத்த தங்கத்தில் டாய்லெட்! நேரம் பார்த்து அலேக்காக தூக்கிச் சென்ற பலே திருடன்!

லண்டன்: தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட்டை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டனில் உள்ள பிளென்ஹெய்ம் பேலஸில் கண்காட்சிக் கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு,  18 கேரட் தங்கத்தை இழைத்து நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட டாய்லெட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இத்தாலிய கலைஞர் மொரிசியோ செடிலான் செய்த இந்த டாய்லெட் முழு செயல்பாட்டில் இருந்த நிலையில், இதனை சிலர் கதவை உடைத்து திருடிச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. 

இதன்பரில் வழக்குப் பதிந்த போலீசார், முதல்கட்ட விசாரணையில் 66 வயதான முதியவர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரை விசாரித்ததில், ஒரு குழுவாக சேர்ந்து இந்த திருட்டைச் செய்ததாகக் கூறியிருக்கிறார். இந்த திருட்டில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். தங்கத்தால் செய்யப்பட்ட அந்த டாய்லெட் பலத்த பாதுகாப்பையும் மீறி திருடப்பட்ட சம்பவம் பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காட்சிக்கு மட்டுமின்றி உபயோகத்திற்காகவும் அந்த டாய்லெட் பிளம்பிங் செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்தது. அதனை அப்படியே திருடர்கள் பெயர்த்தெடுத்துச் சென்றதால் அது வைக்கப்பட்டிருந்த இடம்முழுக்க ஒரே கழிவுநீரால் நிரம்பி, நாற்றமடிக்கும் நிலை ஏற்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.