களைப்பில் சாலை ஓரம் படுத்து உறங்கிய பக்தர்கள்! அதிவேகத்தில் ஏறி இறங்கிய பேருந்து! உடல் நசுங்கி துடிதுடித்த 7 பேர்! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையோரத்தில் தூங்கிய பக்தர்கள் மீது பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம் மோகன்புரா மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவிற்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு கடந்த 3 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர். அப்போது சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் புலந்த்ஷர் பகுதியில் உள்ள நரோரா என்னுமிடத்தில் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இரவு நேரத்தில் வாகனத்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கி படுத்து ஓய்வெடுத்தனர். அதில் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் வாகனத்தின் வெளியே ரோட்டின் ஓரத்தில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது எதிரே வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது பேருந்து அங்கிருந்தவர்கள் மீது மோதி நின்றதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது அந்த வழியாக வந்த வாகனத்தில் சிறுவர்கள் கீழே இறங்கி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தும் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போனது விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மற்றும் அந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.