தோனிக்கு பதில் ரிஷப் பந்த்! ரவி சாஸ்திரி முடிவால் டிரஸ்ஸிங் ரூமில் கோலி வாக்குவாதம்! வைரல் புகைப்படம்!

தான் ஆட்டம் இழந்த பிறகு தோனியை அனுப்பாமல் ரிஷப் பந்தை சாஸ்திரி அனுப்பியதால் கோலி செய்த வாக்குவாத புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


ஆட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களில் இந்திய அணியின் பேட்டிங் கொலாப்ஸ் ஆனது. ரோஹித்தை தொடர்ந்து கோலியும் நடையை கட்டிய நிலையில் அனுபவ வீரர் தோனியின் சேவை இந்திய அணிக்கு தேவைப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரிஷப் பந்த் களம் இறக்கப்பட்டார். அவரும் பொறுப்புடன் ஆடினார். ஆனால் அனுபவமின்மையில் விக்கெட்டை தேவையில்லாமல்பறி கொடுத்தார் ரிஷப் பந்த். 

32 ரன்களில் சிக்சர் அடிக்க ஆசைபட்டு ரிஷப் பந்த் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து டிரஸ்ஸிங் ரூமில் இருந்து வேக வேகமாக வெளியே வந்தார் கோலி. நேராக ரவி சாஸ்திரியிடம் சென்ற அவர் தனக்கு பிறகு தோனியை அனுப்பியிருக்கலாம் எதற்காக பந்தை அனுப்பினீர்கள் என்று கேட்டது போல் இருந்தது அவரது நடவடிக்கை.

அப்போது கோலியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. ஆனால் இயலாமையை எண்ணி சாஸ்திரி சோகமே உருவாக அங்கே அமர்ந்திருந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்திய அணியின் தோல்விக்கே சாஸ்திரி – கோலியின் அரசியல் தான் காரணம் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.