மாணவர்களுக்கு அரிசி,பருப்பு இலவசம் பள்ளிக்கூடம் திறக்கும் வரையிலும்..! எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், அங்கன்வாடிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை எடப்பாடியார் அரசு எடுத்துவருகிறது.


புரட்சித்தலைவர் வழியில் எல்லா காலங்களிலும் சத்துணவு வழங்குவதை எடப்பாடியார் அரசு தீவிரமாக செயல்படுத்திவருகிறது. கொரோனா சூழலில் பொதுமக்கள் வேலை இன்றி தவித்து வருவதாலும், அவர்களின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாலும் ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

எனவே, மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சத்துணவு திட்டத்தின் கீழ் அரசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்குங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், ஏழை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுப்படுத்த முடியும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.