ரூ‌.3000 சம்பள உயர்வு! வீட்டு பணிப் பெண்ணின் அந்த இடத்தில் 64 வயது நபர் டச்! பிறகு நேர்ந்த விபரீதம்!

மும்பை அருகே வீட்டுப் பணிப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஓய்வு பெற்ற விமான நிலைய அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண் முதல் நாளில் வேலைக்குச் சென்ற போது 64 வயதான அந்த நபர் தனது மனைவி வெளியூருக்குச் சென்றுள்ளதாகவும், தன்னுடன் இணங்கி நடந்துகொண்டால் தான் கூடுதலாக 3 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மறுத்த அந்தப் பெண் உடனடியாக அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். 

இதையடுத்து மறுநாள் அந்தப் பெண் வேலைக்கு வந்த போது அந்த நபர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண் உடனடியாக போன் மூலம் தனது கணவனிடமும், தன்னை அந்த வீட்டு வேலைக்குக் அறிமுகப்படுதியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்தப் பெண் காவல் நிலையத்தையும் தொடர்பு கொண்டு தனக்கு நேர்ந்தது தொடர்பாக புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்தப் பெண்ணை அந்த வீட்டு வேலைக்கு அறிமுகப்படுத்தியவரும், ஏற்கனவே அந்த வீட்டில் வேலை செய்தவருமான மற்றொரு பெண்ணிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்தப் பெண் தான் வேலை செய்தபோது தனக்கும் அந்த வீட்டில் அதுபோன்ற அனுபவங்கள் நேர்ந்ததாகத் தெரிவித்தார்.  இதையடுத்து  ஓய்வு பெற்ற விமான நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தபோலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.