வண்டு முருகன் பாணியில் சவால்..! பத்திரிகையாளரை தேடிச் சென்று புரட்டி எடுத்த விசிகவினர்! அதிர்ச்சி காரணம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட மாத இதழ் ஆசிரியர் அக்கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.


ராணிப்பேட்டையில் குணசேகரன் என்பவர் கலைஞர் பாதை என்ற மாத இதழ் நடத்தி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறி தனது முக நூல் பக்கத்தில் விமர்சித்து படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார் குணசேகரன். 

இதனால் ஆத்திரமுள்ள விடுதலை வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் செல்போன் மூலமாக குணசேகரனை மிரட்டியதாகவும் அதற்கு குணசேகரன் பயப்படாமல் தைரியம் இருந்தால் நேரில் வா என்று கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து கலைஞர் பாதை குணசேகரன் இருப்பிடத்துக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்

விடுதலை சிறுத்தைகள் கூட இருந்துக் கொண்டே எதிராக செயல்படுகிறாயா என கேட்டு சரமாரியாக அடித்துள்ளனர். இதை அடுத்து அவரை தொண்டர்கள் விடுவித்த நிலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதையடுத்து விசிகவினர் மீது கலைஞர் பாதை குணசேகரன் புகார் அளித்த நிலையில், அவதூறு கருத்து பதிவிட்டதாக விசிகவினர் தரப்பிலும் கலைஞர் பாதை குணசேகரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கருத்துக்களுக்கு எதிர் கருத்து தெரிவிக்காமல் கொலைவெறி தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வேண்டும் என குணசேகரன் புகாரில் தெரிவித்துள்ளார்.