பாஜக ஸ்லீப்பர் செல் கராத்தே! உடனே தூக்குங்க! கண் சிவந்த ஸ்டாலின்!

எப்படியாவது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியை உடைத்துவிட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கையில் படு தீவிரமாக இயங்கிவருபவர் கராத்தே தியாகராஜன்.


ஒரு காலத்தில் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். இப்போது பா.ஜ.க.வின் ஸ்லீப்பர்செல்லாக மாறிவிட்டார் என்று அவரது கட்சியினரே சந்தேகம் தெரிவிக்கின்றனர். அதனால் கட்சிக்குள் குழப்பம் செய்வதற்கு மிகவும் பிரயத்தனம் செய்துவருகிறார்.  காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகத்தான், கருணாநிதி பிறந்த நாளில் அவரது புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொண்டுவந்து வைத்து, மாலை போட்டு கும்பிட்டார்.

அது ஒரு பெரிய சர்ச்சையாக மாறினாலும், எப்படியோ அழகிரி பேசி சமாளித்துவிட்டார். இந்த நிலையில் அடுத்தகட்ட பிரச்னையைத் தொடங்கிவிட்டார். அதாவது காங்கிரஸ் தனியே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமாம், இவர் 45 கவுன்சிலர்களை ஜெயிக்க வைப்பாராம். இவராலேயே தனியாக நின்றால் ஜெயிக்க முடியாது என்ற நிலையில், வேண்டுமென்றே தி.மு.க.வை அசிங்கப்படுத்தி கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் இவரது அசைன்மென்ட் என்று கட்சியில் எல்லோருமே சொல்லத் தொடங்கிவிட்டனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை எப்படியாவது உடைக்கவேண்டும் என்றுதான் பா.ஜ.க. முடிவெடுத்தது. ஆனால், முடியவில்லை. அடுத்த தேர்தலிலும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்திருந்தால் சிக்கல் என்பதை உணர்ந்துதான் பா.ஜ.க. இப்படியொரு மூவ் எடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

பா.ஜ.க.விடம் தியாகராஜன் விலை போனதால்தான் கட்சிக்குள் கலகம் செய்கிறாராம். இதை தெரிந்துகொண்டுதான் ஸ்டாலின் அவரை கட்சியில் இருந்து வெளியேற்றச் சொல்லி அழகிரியிடம் கோபமாக சொல்லியிருக்கிறாராம். அவ்வளவு தைரியம் அழகிரிக்கு இருக்கிறதா என்ன?