சாதனை புரியும் ரிலையன்ஸ் பங்குகள்! 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட முதல் நிறுவனமாம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 2% உயர்ந்து 1,423 ரூபாயை எட்டியது.


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 2% உயர்ந்து 1,423 ரூபாயை எட்டியது. இதன்மூலம் 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை எட்டிய முதல் இந்திய நிறுவனமாக சாதனை புரிந்துள்ளது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். 

இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் மொத்தமாக 633.90 கோடி பங்குகளைக் கொண்டு வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி முதல் இதுவரை இதன் பங்குகள் கிட்டத்தட்ட 26% உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிகபட்ச லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.

இதனிடையே. பாங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் எனும் நிறுவனம் , அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மூலதனத்தை அடைந்த முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இருக்க போகிறது என்று அறிவித்துள்ளது .

2019-20 ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான அறிக்கையை ரிலையன்ஸ் ஜியோ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 990 கோடியாக உயர்ந்துள்ளதாகவும். இதன் லாபம் கடந்த ஆண்டு இதே காலத்தில் 681 கோடி ரூபாயாக இருந்தாகவும் கூறியுள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் எனவும். உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் 47 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அடுத்தபடியாக. தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் சந்தை மூலதனத்தை கணக்கிடுகையில். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும், தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கி லிமிடெட் மூன்றாவது இடத்திலும் உள்ளது.