எவ்ளோ படிச்சிருந்தாலும் செக்ஸ் விஷயங்களில் பெண்கள் ரொம்ப வீக்..! வெளியானது ஆய்வு முடிவு!

சிட்னி: எவ்ளோ படிச்சாலும் பெண்களுக்கு செக்ஸ் விசயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.


ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் என்ற பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, செக்ஸ் வாழ்க்கை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வில், 18 முதல் 39 வயது வரை உள்ள பெண்கள்  கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் செக்ஸ் பற்றி விழிப்புணர்வு இல்லை, திருப்தி இல்லை, செக்ஸில் ஈடுபட தயக்கமாக, குற்ற உணர்வாக உள்ளதென்று  குறிப்பிட்டிருக்கின்றனர்.  

தவிர பலர், மாடல் அழகிகள் போல தாங்கள் இல்லை என்று வருத்தம் கொள்கின்றனர். உடல் அழகு இல்லை என்ற கவலையால் பாதிக்கப்படும் அவர்கள் செக்ஸில் முழு ஆர்வமாக ஈடுபட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களில் பல பெண்கள் நிறைய படித்தவர்கள் ஆவர். எவ்வளவுதான் கல்வி அறிவு இருந்தாலும், பெண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளதென்று,

ஆய்வு நடத்தியவர்கள் கூறுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில், பெண்கள் தங்களது செக்ஸ் வாழ்க்கை பற்றிய அடிப்படை விவரங்களை கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும் எனவும்  ஆய்வுக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.