சாதி மாறி காதலித்த பெண்ணுக்குத் தண்டனை, அரை நிர்வாண ஊர்வலம்! எங்கே போகிறது இந்த சமூகம்?

மத்திய பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் என்னும் இடத்தில் வசித்து வந்த பெண் தான் காதலித்து வந்த இளைஞருடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.


இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து காதலனிடம் இருந்து வலுக்கட்டாயமாக சேலையை உருவி அரைநிர்வாணமாக ஊர் வரை இழுத்துச் சென்றுள்ளனர்.

சாதி மாறி காதலித்ததால் என்ற தண்டனையை பெண்ணின் உறவினர்கள் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இச்சம்பவம் குறித்து போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை. வீடியோ பார்த்த பிறகு பெண் யார் என்பதை விரைவில் விசாரிப்போம் என மெத்தனமாக போலீசார் கூறியுள்ளனர்.