சேலத்தில் கரகாட்டப் பெண் கலைஞர் குளித்துக்கொண்டிருந்த போது வீடியோ எடுத்து அவரது கணவருக்கே அனுப்பி வைத்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம் பெண்ணின் குளியல் அறை வீடியோ! அவரது கணவருக்கே வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைக்கப்பட்ட கொடுமை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தம்பதி துர்கா - வரதராஜ். 26 வயதான துர்கா ஒரு கரகாட்டக் கலைஞர். அதன் மூலம் வரும் பணம் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்கும் முக்கியமானதாக இருந்தது.
இந்நிலையில் அண்மையில் சேலம் தாதகாப்பட்டியை அடுத்த மூணாங்கரடு என்ற இடத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த சென்ற துர்கா தனது உறவினரான ராஜ்குமார் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று துர்கா குளிக்க சென்றபோது, அவருக்கு தெரியாமல், ராஜ்குமாரின் மகன் சிவா வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் தான் எடுத்த வீடியோவை சிவா தனது நண்பன் குமாருக்கு அனுப்பி வைக்க, குமார் அதனை துர்காவின் கணவர் வரதராஜுக்கே அனுப்பி வைத்தான் இதையடுத்து குமாருக்கும், துர்காவின் கணவர் வரதராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போதுதான் செல்போன் மூலம் வீடியோ எடுத்தது சிவா என்று தெரியவந்தது.
இதையடுத்து வரதரஜ் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவாவையும் குமாரையும் கைது செய்துள்ளனர்.