இளம் பெண்ணை கேலி செய்த இளைஞர்கள்! தட்டிக்கேட்ட உறவினரை கொடூரமாக கொலை செய்த பயங்கரம்!

புதுக்கோட்டையில் தனது உறவுக்கார பெண்ணை இரு இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.


இதனையடுத்து கேலி செய்தவர்கள் மீது புகார் கொடுத்தவரை சில நாட்கள் கழித்து இளைஞர்கள் இளைஞர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது உறவுக்கார பெண் ஒருவரை பொது இடத்தில் வைத்து காயாம்புஞ்சையை சேர்ந்த இளைஞர்கள் தினேஷ், சுரேந்திரன் ஆகியோர் கேலி கிண்டல்  தெரிகிறது. இதனைக் கண்டித்த சுப்பிரமணியன் இதுதொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன் பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் இந்த இரு இளைஞர்கள் மீது புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் காயாம்புஞ்சை பகுதியில் இருக்கும் சுப்பிரமணியனுக்கும் அவர் புகார் கொடுத்த இளைஞர்கள் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் தினேஷ், சுரேந்திரன் ஆகிய இருவரும் சுப்பிரமணியனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர் .இதை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்

இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார்  வழக்குப்பதிவு செய்து  தினேஷ் சுரேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். புகார் கொடுத்ததற்காக சுப்பிரமணியனை கொலை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால்சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது. பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவித்ததையடுத்து கூட்டம் கலைந்து சென்றது.