டிரைவருடன் தகாத உறவு! ஹோட்டல் ரூமில் பிரபல நடிகரின் மனைவிக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

மும்பை: ஓட்டலில் இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த புகாரில் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


40 வயதாகும் அந்த நபர், பாலிவுட் நடிகர் ஒருவரின் மனைவிக்கு, தனிப்பட்ட கார் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவர், 35 வயதாகும் மற்றொரு பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். அந்த பெண்ணிற்கும், திருமணமாகிவிட்டது. இருவரும், வெளியில் தெரியாமல் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். 

இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, இருவரும் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஆனால், அந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியதை பார்த்து, அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி டிரைவரிடம் கேட்டபோது, ஓட்டல் அறையில் செல்ஃபோன் மறைத்து வைத்து, இந்த வீடியோவை  எடுத்து வெளியிட்டதாகக் கூறியிருக்கிறார். 

இந்த வீடியோவால், தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என அஞ்சிய சம்பந்தப்பட்ட பெண், உடனடியாக இதுபற்றி டிஎன் நகர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், வழக்குப் பதிந்த போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் விதமாக இந்த செயலை செய்ததால் அவரை கைது செய்ய நேரிட்டதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.