வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிந்தும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடைசி நேரத்தில் மணப்பெண் பற்றி தெரிந்த உண்மை! திருமணத்தை நிறுத்திய உறவுகள்! ஆனால் மணமகன் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு!
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் ரோஜா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வினாயகர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அங்கு திரண்ட சில உறவினர்கள் மணப்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
இதனால் கோபம் அடைந்த மணமகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரோஜா என்பவரை தெரிந்துதான் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார் ரவி. ஒரு பெண் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில்தான் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்ததாக ரவி தெரிவித்ததார்.
இதையடுத்து ரவி விருப்பத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்த போலீசார் உறவினர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் ரோஜாவை திருமணம் செய்து கொள்வதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றார் ரவி.
தன்னால் ஒரு பெண் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக உற்றார், உறவினர்களையே மணமகன் ரவி எதிர்த்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.