ஜியோ, ஏர்டெல் ரீஜார்ஜ் கட்டண உயர்வு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

டெல்லி: ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ, வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டணம் அதிருப்தி அளித்ததால், ஜியோவின்  அதிரடி ஆஃபர் சேவையை பலரும் பயன்படுத்த தொடங்கினர். இதன்படி, ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வர்த்தகம் இந்திய அளவில் சக்கை போடு போடுகிறது.

தற்போதைய நிலையில் இருப்பதிலேயே ஜியோ நிறுவனம்தான் அதிகளவு ஆஃபர்களை பட்ஜெட் விலையில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதலாக, ஜியோ மட்டுமின்றி வோடஃபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த தீர்மானித்துள்ளன.  

இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும்பட்சத்தில், வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், தற்போது செலவிடுவதைவிட கூடுதலாக 20 சதவீதம் செலவிட வேண்டிவரும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், மற்ற விலை குறைவான பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்காக செயல்பட்டு வரும் இதர ரீசார்ஜ் கட்டணங்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படாது எனவும் இந்நிறுவனங்கள் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. எப்படி இருந்தாலும், ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் சிம் வைத்திருப்பவர்களுக்கு இனி வரும் காலம் சற்று சிக்கலானதாகவே அமையும் என்பதே உண்மை...