வயதில் மூத்த பேட்மிண்டன் வீராங்கனையுடன் நெருக்கம் ஏன்? விஷ்ணு விஷால் தரமான விளக்கம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் தற்போது நெருங்கி பழகி வருகிறார்.


நடிகர் விஷ்ணு விஷால் 4 ஆண்டுகளாக ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 2011 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்று 3 வயது மதிக்க  தக்க குழந்தை ஒன்று உள்ளது. 

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணமாக அமைந்தன.  பின்பு கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்தும் பெற்றனர். இருப்பினும் தன்னுடைய குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் நட்பு ரீதியான உறவில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் பிரிவிற்க்கான உண்மையான காரணம் வெளிவந்துள்ளது.  அதாவது நடிகர் விகுனு விஷாலும் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் இணைந்து நெருக்கமாக பழகி வருவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இதற்கு காரணம் அண்மையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட செலஃபீகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தான்.  ஆம்.. இருவரும் நெருக்கமாக இருக்கும் வண்ணம் உள்ளது அந்த  புகைப்படம்.  தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள்  பலரும்,  "ஜுவாலா உடன் இணைய வேண்டும் என்பற்காக தான் உங்கள் மனைவியை விட்டு பிரிந்தீர்களா?"  என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த கருத்தை ஏற்க மறுத்த நடிகர் விஷ்ணு விஷால் எனக்கும் ஜுவாலாவிற்கும் தற்போது நட்பு ரீதியான உறவு மட்டும் தான் உள்ளது என்று கூறியுள்ளார். எனக்கு ஜூவாலாவை பிடிக்கும் அவருக்கும் என்னை பிடிக்கும் என்று மட்டும் முடித்துக் கொண்டார். இதனிடையே ஜூவலாவிற்கு வயது 35 ஆகிறது.

இவர் ஏற்கனவே கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர். தற்போது அவரை விட 1 வயது குறைவான விஷ்ணுவுடன் டேட்டி செய்து வருகிறார்.