பிக்பாஸ் சரவணனுக்கு 2வது திருமணம் செய்து வைத்தது ஏன்? முதல் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!

பிக்பாஸ் சித்தப்பு சரவணனுக்கு 2வது திருமணம் செய்து வைத்தது ஏன் என்று அவரது முதல் மனைவி மனம் திறந்துள்ளார்.


தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரவணன். பிறகு குணச்சித்திர வேடங்களில் கலக்கிய சரவணன் தற்போது பிக் பாஸ் மூலமாக தமிழர்கள் அனைவர் குடும்பத்திலும் ஒரு நபராக மாறிவிட்டார்.

இந்த நிலையில் கமலிடம் பேசும் போது தனக்கு தனது மனைவியே 2வது திருமணம் செய்து கொள்ளச் சொன்னதாகவும் இதற்கு காரணம் தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று தான் கூறி கண்ணீர் விட்டார். இந்த நிலையில் சரவணனின் முதல் மனைவி முன்னணி தமிழ் இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் எதற்காக கணவனுக்கு 2வதுதிருமணம் செய்து வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூர்ய ஸ்ரீ கண்கள் கலங்கியபடி பதில் அளித்தார். சரவணனை மிகவும் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்ததாக அவர் கூறினார்.

ஆனால் திருமணம் ஆகி பல வருடங்களாக குழந்தை பிறக்கவில்லை. சென்னையில் நாங்கள் செல்லாத மருத்துவமனையே இல்லை. ஆனாலும் எங்களுக்க அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

ஒரு கட்டத்தில் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தோம். ஆனால் அதற்கு சரவணன் பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் சரவணனுக்கு 2வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

இதனால் நானும் வேறு வழியில்லாமல் சரவணன் 2வது திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன். அதோடு மட்டும் அல்லாமல் அனைத்து ஏற்பாடுகளையும் நானே செய்து என் கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்தேன். அதன் பிறகு குழந்தை பிறந்தது.

தற்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவ்வப்போது கவலையாக இருக்கும் என்று சூர்ய ஸ்ரீ கூறிய போது நமக்கே கஷ்டமாக இருந்தது.