தமிழிசை இல்லாமலும் பி.ஜே.பி. வளரும் என்று வானதி சொன்னது ஏன் தெரியுமா? இரண்டு பேருக்கும் நடந்த பஞ்சாயத்து இதுதான்.

தமிழிசை இல்லா விட்டாலும் பிஜேபி வளரும் என்று வானதி பொங்குவதன் பின்னணி


நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், முன்னாள் தமிழ்நாடு பிஜேபி தலைவரும்,இன்றைய தெலங்கானா ஆளுநருமான ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது, 'தமிழிசை இருக்கும் போதும் தமிழகத்தில் பிஜேபி வளர்ச்சி அடைந்தது,இல்லாத போதும் 'நன்றாக' வளர்ந்து வருகிறது.' என்று சொல்லி இருக்கிறார்.

இதன் பின்னணியைப் புரிந்து கொள்ள நாம் சற்று பின்னால் போக வேண்டும்.தமிழக பிஜேபியை பொறுத்த வரை மூன்று பெண் தலைவர்கள் பிரபலம்.வானதி சீனிவாசன்,தமிழிசை செளந்தரராஜன், நிர்மலா சீத்தாராமன்.இந்த மூவரில் நிர்மலா சீத்தாராமன் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஆகிவிட்டார்.தமிழிசையோ தெலங்கானா ஆளுநராகி ' உய்யாலோ' பாடிக்கொண்டிருக்கிறார்.ஆனால்,வானதி?.இதில் ஜாதிக்கு முக்கிய பங்கு இருப்பதாக வானதி கருதுகிறார்.

நிர்மலா பிஜேபி வணங்கும் ஜாதியைச் சேர்ந்தவர்,அதனால் அவரோடு மோத முடியாது என்பது வானதிக்குத் தெரியும்.தமிழகத்தில் பிஜேபி ஜாதி குழுக்களாகப் பிரிந்து கிடக்கிறது. கோவை, கன்னியாகுமரி , நெல்லை என்கிற இரண்டு பகுதிகளில் மட்டுனே சிறிதளவு செல்வாக்கை கொண்டிருக்கிறது அக்கட்சி.

இதில் கன்னியாகுமரி நெல்லை பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதி தமிழிசைக்கு ஆதரவாக இருப்பதாக வானதி கருதுகிறார்.வானதி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அங்குள்ள பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல.இவை எல்லாம் இருக்க ' சைலாக்' என்கிற நிறுவனத்தின் வழக்கறிஞராக இருக்கும் கணவரும்,அதன் பங்குதாரராக இருக்கும் வானதியின் தம்பி சிவகுமார் கந்தசாமியும் குறுகிய காலத்தில் சில பல கோடிகள் சேர்த்த விவகாரம் மிகச்சரியாக வானதி தமிழ்நாடு பிஜேபி தலைவராக காய் நகர்த்தியபோது வெடித்தது.அதன் பின்னணியில் இருந்தவர் பாலசுப்பிரமணியம் ஆதித்தன் என்கிற திருசெந்தூர்க்காரர்.

700 ரூபாய் சீலிங் ஃபேனை தவணை முறையில் வாங்கி கடைசித் தவணை கட்டாமல் விட்டவர் வானதி.திருச்செந்தூர் கூட்டத்தில் பேச வந்துவிட்டு போக்கு வரத்துச் செலவு பணம் மட்டுமில்லாமல் மேற்கொண்டு சில நூறுகள் தன்னிடம் பெற்றுக்கொண்டு போன வானதி இப்போது கோடிகள் சேர்த்ததது எப்படி என்று கேட்டு வானதியின் கனவுகளில் மண் அள்ளிப் போட்டார்.இந்த பால சுப்பிரமணிய ஆதித்தன் தமிழிசையின் ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக அந்த குறிப்பிட்ட ஜாதியினர் லாபி செய்வதாக வானதி நினைக்கிறார்.

அவருக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கும் அந்த ஊழல் புகார்தான் காரணம் என்று வானதி நம்புகின்றார்.இதன் வெளிப்பாடுதான் வானதியின் அந்தக் கோபமான வார்த்தைகளுக்கு காரணம்.