ஒரே ஒரு பாலம்! பொன்னார் தோற்றதன் பரபரப்பு பின்னணி!

மத்திய அமைச்சராக இருந்து மார்த்தாண்டத்திற்கு பாலத்தைக் கொண்டுவந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இது தன்னுடைய சாதனை என்று அவர் சொல்ல, அது மக்களுக்குப் பெரும் வேதனை என்று தோல்வியை பரிசாக கொடுத்துவிட்டனர்.


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக பொன்னார் கட்டிய மார்த்தாண்டம் பாலம், ஆசியாவில் இரண்டாவது நீளமான பாலமாம். சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளம். தேர்தலுக்கு முன்னர் திறக்கப்பட்ட அந்த பாலம் உருப்படியாகக் கட்டவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. ஆம், இரும்பு பட்டிகளை வரிசையாக அடுக்கி போல்ட் போட்டு முறுக்கியிருக்கிறார்கள்.

இதைக் கட்டுவதற்கா ஐந்து ஆண்டுகள் ஆனது என்று மக்கள் கொந்தளிக்கிறார்கள். அதனாலே கடைசியில் பாலத்தில் கீழ் வசித்த மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்ந்து பொன்னாருக்கு எதிராக வாக்களித்து அவரை தோற்கடித்திருக்கிறார்கள். ஆம், அந்த பாலத்துக்கு நிலம் கொடுத்த மக்கள் ஒன்றுசேர்ந்து தோற்கடித்து விட்டார்கள்.

எத்தனை நல்ல திட்டம் என்றாலும், மக்களுக்குப் பிடிக்காத திட்டத்தைக் கொடுத்தால் தோல்விதான் பரிசாகக் கிடைக்கும் என்பதற்கு உதாரணம்தான் பொன்னார். அந்தப் பாலத்துல போனா, பார்த்துப் போங்க பொன்னார்.