உண்மையிலே பிரபாகரனை சீமான் சந்தித்து இருக்கிறாரா? இவர் சொல்றதைக் கேளுங்க!

நான் பிரபாகரனின் தம்பி. என்னை அரசியலுக்கு அனுப்பிவைத்ததே பிரபாகரன் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிவருகிறார் சீமான்.


உண்மையில் பிரபாகரனுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து கொளத்தூர் மணி தெரிவித்திருக்கும் தகவல் இதோ. 2008-ல் விடுதலைப்புலிகளின் ஊடகவியல் பிரிவு சார்பில் திரைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்பம் தெரிந்த ஓர் இயக்குநர் வேண்டும் என என்னிடம் கேட்டார்கள்.

சீமானைப் பரிந்துரைத்தேன். அதேபோல, விடுதலைச் சிறுத்தைகளின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசிடமும் கேட்டிருக்கிறார்கள். அவரும் சீமானையே பரிந்துரைத்துள்ளார்.

அதையடுத்தே விடுதலைப்புலிகள் ஊடகவியல் பிரிவினருக்குப் பயிற்சியளிக்க ஈழத்துக்குச் சென்றார் சீமான். 10 நாள் பயிற்சி முடிந்து திரும்பி வரும்போது, ஊடகவியல் பொறுப்பாளர் சேரலாதனிடம் ‘நான் பிரபாகரனைப் பார்க்க வேண்டும்’ என வற்புறுத்தியுள்ளார்.

அன்றைய தினம், புலிகளின் ராணுவக் கல்லூரி பட்டமளிப்பு விழா. அதற்காகத் தலைவர் பிரபாகரன் புறப்பட்டுக்கொண்டிருந்த போது சீமான் சந்தித்துள்ளார். சீமான் நுழைவாயிலில் சென்று வெளிவருவதற்கு 12 நிமிடம் தரப்பட்டது. பலகட்ட சோதனைகளுக்குப் பிறகே தலைவரைச் சந்திக்க முடியும். இதைவைத்துப் பார்த்தால், நான்கு நிமிடங்களுக்குமேல் அவர் தலைவருடன் கழித்திருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் மட்டுமே எடுத்திருக்க முடியும்.

அதனால், ‘தலைவருடன் ஆமைக்கறி தின்றேன்’, ‘போர்க்கப்பலில் அரிசி மூட்டையில் தலைவரோடு அமர்ந்து போர்ப்பயிற்சி எடுத்தேன்’ என்று சீமான் சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை. என்று சொல்லியிருக்கிறார்.

நாலு நிமிடங்களுக்கே இந்தப் பேச்சா... சீமானுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது என்பது உண்மைதான்.