முதலமைச்சர் பதவி! தலைக்கு மேல் கத்தி! எடப்பாடி டெல்லி செல்வதன் உண்மை பின்னணி!

முதலமைச்சர் பதவியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி தற்போது வரை அகன்றபாடு இல்லை என்பதால் எடப்பாடி தொடர்ந்து டென்சனிலேயே இருப்பதாக சொல்கிறார்கள்.


நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் எடப்பாடி டவுள் கேம் ஆடிவிட்டார் என்பது தான் அவர் மீது பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருக்க காரணம் என்கிறார்கள். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலருக்கு எடப்பாடி தரப்பில் இருந்து சென்ற தேர்தல் நிதியை சிறிது லேட்டாக பாஜக தரப்பு மோப்பம் பிடித்துள்ளது. அப்போது முதலே எடப்பாடிக்கு கொடுத்து வந்த ஒத்துழைப்பை டெல்லி அப்ரூட்டாக கட் செய்துவிட்டது.

இதனால் தான் சுமார் ஒரு வாரம் வரை தலைமைச் செயலகம் பக்கமே வராமல் எடப்பாடி வீட்டிலேயே முடங்கி கிடந்தார். மேலும் முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி அவராகவே விலகுவது நல்லது என்று டெல்லியில் இருந்து சமிக்ஞைகள் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் அவர்களுக்கு முன்பாகவே டெல்லி சென்ற ஆளுநர் பன்வாரிலால் உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிவிட்டு திரும்பினார்.

இதனை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த ஆளுநர் பன்வாரிலால், வந்ததும் வராததுமாக எடப்பாடியை அழைத்து பேசினார். அப்போதும் கூட டெல்லி தற்போது முன்பு போல் இல்லை.அனைத்தும் மாறிவிட்டது மேலே என்ன சொல்கிறார்களோ அதை செய்துவிடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற ரீதியில் முதலமைச்சரிடம் கூறியதாக சொல்கிறார்கள்.

ஆனால் தான் அமித் ஷாவை சந்தித்து பேச உள்ளதாகவும் அதன் பிறகு முக்கிய முடிவை எடுக்க உள்ளதாகவும் எடப்பாடி ஆளுநரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் எடப்பாடி டெல்லி செல்வது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மட்டும் அல்ல பிரதமரையும் சந்தித்து சமாதானமாகத்தான் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறாராம் ஓபிஎஸ்.