23 அடி நீளம்..! 100 கிலோ எடை..! அனகோண்டா பாம்பை நேருக்கு நேராக எதிர்கொண்ட நீச்சல் வீரர்! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு!

சினிமாவில் மட்டுமே அனகொண்டா வகை பாம்புகளை நாம் கிராபிக்ஸ் காட்சிகளாக ரசித்து வரும் வேளையில் ஆற்று நீருக்குள் மூழ்கி இருந்த அனகொண்டா பாம்பை மிக அருகில் சென்று ஒருவர் படம் பிடித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


அப்படி ஒரு பாம்பு இருப்பதை அனகொண்டா என்ற ஆங்கில திரைப்படங்கள் வந்த பிறகுதான் நிறைய பேருக்கும் தெரியும் என்பதே உண்மை. அர்ஜெண்டினா நாட்டின் பார்மசோ ஆற்றில் பார்டலோமியா என்ற நீரடி உயிரின ஆய்வாளர் தன்னுடைய பணியை மேற்கொண்டிருந்த போது சுமார் 23 அடி நீளம் 100 கிலோ எடை உள்ள அனகொண்டா பாம்பை பார்த்தார். 

யாரையாவது வேட்டையாடி உணவாக சாப்பிட வேண்டும் என்று காத்திருந்த அந்த பாம்பை பார்த்து பயப்படாமல் மிக அருகில் சென்று படம் பிடித்தார் நீரடி உயிரின ஆய்வாளர் பார்டலோமியா.

தன் மீது பயம் இல்லாமல் தன்னையே சுற்றி சுற்றி பார்டலோமியா படம் பிடிப்பதை பார்த்த அனகொண்டா அதை விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது. இது குறித்து பார்டலோமியா தெரிவித்தபோது வனப் பகுதியில் மற்றும் கரைப் பகுதியில் அனகொண்டா பாம்பை பலர் படம் பிடித்துள்ளனர்.

ஆனால் பசிக்காக ஆற்று நீரில் மூழ்கியபடி காத்திருக்கும் அனகொண்டாவை படம் பிடித்தது கொஞ்சம் திரில்லிங்காக இருந்ததாக தெரிவித்தார் நீரடி உயிரின ஆய்வாளர் பார்டலோமியா.

இந்த காட்சியை சமூக வலை தளங்களில் பார்த்த பலர் நிஜமாகவே நேரில் பார்ப்பது போல் காட்சிகள் உள்ளதாக பார்டலோமியாவை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.