இந்துக்களாக ஒன்றிணைவோம்..! காவித்துண்டுடன் ஓபிஎஸ் மகன் விடுத்த பகீர் அழைப்பு!

தேனியில் நடைபெற்ற இந்துமுன்னணி கூட்டத்தில், ஒரு காவித் தொண்டர் போலவே கலந்துகொண்டு பட்டயக் கிளப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வத்தின் அருமை மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஏன் இந்த மேடையில ஏறுகிறார் என்று பா.ஜ.க.வினரே பகீரென அதிர்கிறார்கள்.


ஏற்கெனவே ஒரு முறை, ‘பா.ஜ.க.வுக்குத் தலைவர் ஆகிறார் பன்னீர்செல்வம்’ என்று செய்தி தமிழகமெங்கும் அலையடித்தது. இப்படியொரு செய்தியை எடப்பாடிதான் பரப்பினார் என்றும், அ.தி.மு.க. கட்சியில் இருந்து அவரை அப்புறப்படுத்த அப்படியொரு வேலையை முதல்வர் எடப்பாடி தரப்பில் செய்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதன்பிறகு எப்படியோ அந்த செய்தி அடங்கிப்போனது.

இப்போது பா.ஜ.க. தலை இல்லாத உடலாகக் கிடக்கிறது. யார், யாரோ தலைவராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ரஜினி தொடங்கி பல்வேறு நபர்களின் பெயர்கள் தலைமைக்கு அடிபடுகிறது. இந்த நிலையில்தான் ரவீந்திரநாத் இந்து முன்னணி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். 

ஒரே ஒரு எம்.பி. என்பதால், கட்சி மாறுவதாலும் எந்தப் பிரச்னையும் ஆகிவிடப் போவதில்லை. ஆனால், இந்த வயசுலேயே ரவீந்திரநாத்தை தலைவரா ஏத்துக்குவாங்களா என்பதுதான் கேள்வி. சரி, ஆசைப்படுறதுல என்ன தப்பு? அப்பாவுக்கோ அல்லது மகனுக்கோ ஜாக்பாட் அடிச்சா சரிதான்.

இதனிடையே தேனியில் நடைபெற்ற இந்து சமுதாய நிகழ்ச்சி ஒன்றில் தான் காவித்துண்டுடன் ஓபிஎஸ் மகன் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் முதலில் நாம் அனைவரும் இந்து அதன் பிறகு தான் மற்றவை என்று கூறி வேறு அதிர வைத்துள்ளார்.