ஆசையாக நெருங்கிய 3 குழந்தைகளின் தாய்! ராட்வீலர் நாயிடம் காதுகளை பறிகொடுத்த பரிதாபம்!

இங்கிலாந்தில் ராட்வீலர் ரக நாய் இளம்பெண் ஒருவரின் காதை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவ் ஜான். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. வழக்கம்போல் இவர் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள சோமர்செட் கேரவன் பார்க்கில் வாக்கிங் சென்றுள்ளார். அதே பார்க்கிக்கு ராட்டவீலர் நாயுடன் ஒருவர் வாக்கிங் வந்துள்ளார்.

அந்த நாயை கண்டவுடன் ஸ்டீவ் ஜான் கொஞ்ச நினைத்துள்ளார். பின் அதன் அருகில் சென்று உரிமையாளரிடம் அனுமதி கேட்ட பின் நாயை தொட்டுள்ளார். அதை தொட்ட மறுகனமே அவர் மீது பாய்ந்து காது பகுதியை ராட்வீலர் ரக நாய் கடித்து குதறியது.

இதையடுத்து அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரது காதின் பெரும் பகுதிகளை நாய் கடித்து விட்டதாகவும், அதனால் அவர் செவித்திறன் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து கடித்த நாய் மற்றும் அவரது உரிமையாளரை புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் குறித்து ஸ்டீவ் ஜான் கூறுகையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை எனது குழந்தையே என்னை பார்த்து பயப்படுகிற அளவிற்கு எனது முகம் மாறிவிட்டது என்று வேதனையுடன் தெரிவித்தார்.