சரஸ்வதிக்கும் வெற்றிவேலுக்கும் ரேட் கூடிப் போச்சு! புதிய நிர்வாகிகள் நியமன பின்னணி!

சசிகலாவை சிறையில் சென்று பார்த்துவந்ததும் தினகரனுக்கு எக்கச்சக்க தைரியம் வந்துவிட்டதாம்.


அதனால் சட்டமன்றத்திற்கு ஒற்றை மனிதராக எட்டிப் பார்த்துவிட்டு திரும்பினார். எத்தனை பேர் தன்னைவிட்டு போனாலும் அலட்டிக்கொள்ளாமல், ‘போனால் போகட்டும் போடா’ என்று அடுத்த நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துவிட்டார். அந்த வகையில் கட்சியின் துணைப் பொது செயலாளர்களாக இருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், தஞ்சாவூர் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கசாமியும்தான் அந்த துணை பொதுச்செயலாளர்கள்.

இவர்கள் இருவரும் கட்சி தாவுவதற்குத் தயாராக இருப்பதை அறிந்துதான் இந்தப் பதவி கொடுத்து அழகு பார்க்கிறாராம் தினகரன். பதவி கொடுத்ததற்காக நிச்சயம் இருப்பார்கள் என்று நம்புகிறார். அதே நேரம், பொருளாளராக வெற்றிவேலையும், தங்கதமிழ்ச்செல்வன் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பதவி சி.ஆர்.சரஸ்வதிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. த,லைமை நிலைய செயலாளராக முன்னாள் அரசு கொரடா மனோகரனை நியமனம் செய்திருக்கிறார்.

இந்த நியமனம் குறித்து அ.ம.மு.க.வினரிடம் பேசியபோது, ‘‘இப்போது நிர்வாகிகளாக நியமனம் செய்திருக்கும் ஐந்து பேரில் நான்கு பேர் வேறு கட்சிக்கு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தடுக்க நினைக்கிறார். அது நடக்காது. எந்த ஆஃபரும் இல்லாமல் சரஸ்வதி கட்சி மாற இருந்தார், இப்போது பெரிய பதவி கிடைத்திருப்பதால், ஏதாவது டிமான்ட் வைத்து நிறைவேற்றிக்கொள்வார் என்கிறார்கள்.

ஆக, தினகரன் நிர்வாகிகளுக்கு நல்ல யோகம்தான்.