சுடச்சுட எலிக்கறி! டாஸ்மாக் கடைகளில் பட்டையை கிளப்பும் விற்பனை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் முயல்கறி எனக்கூறி எலிக்கறி விற்பனைசெய்து வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.


இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிமகன்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்துபவர்களுக்கு சைடிஸ் ஆக எலிக்கறி பரிமாறப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள எலிகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.

அப்போது ஊர் மக்கள் அவனைப் பிடித்து விசாரித்த போது அங்குள்ள எலிகளை வேட்டையாடி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்த பையை வாங்கி பிரித்து பார்த்தபோது அதில் நிறைய எலிகள் இருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தபோது அந்த எலிகளை அருகில் உள்ள டாஸ்மாக் பாருக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். அங்கே வரும் குடிமகன்களுக்கு முயல்கறி என கூறி இனி கருவிகளை விற்பனை  செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்த எலிகளை கைப்பற்றி அருகிலே குழி தோண்டி புதைத்து விட்டனர். இதனை வீடியோவாக பதிவு செய்த நபர் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் .மற்றும் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் எலிக்கறி பரிமாறப்படுகிறது? இல்லையா? என்பது குறித்தும் அங்கு உள்ள பார்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இலைகள் மூலம் பிளேக் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஊர் பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.