நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்: எந்த பவுலரும் செய்யாத சாதனை புரிந்த ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது T20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் எடுத்து உலக சாதனை செய்துள்ளார்.


ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3வது T20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றது.

முதல் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது. அந்த அணியின் முகமது நபி சிறப்பாக விளையாடி 81 ரன்களை எடுத்தார்.

211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றது.

 ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளர் ரஷீத் கான் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை எடுத்தார். இவர் வீசிய 16 வது ஓவரின் கடைசி பந்தில் கெவின் ப்ரைன் அவுட் ஆனார். பின்னர் இவரின் அடுத்த ஓவரான 18 வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்களை எடுத்து ஹாட் ட்ரிக் சாதனை செய்துள்ளார்.

மேலும் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்களை போட்டியில் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை இவர் செய்துள்ளார். T20 போட்டிக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ரஷீத் கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.