கற்பை காக்க போராடிய இளம் பெண்! ஆனால் ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்த நீதிமன்றம்! கேட்போரை உலுக்கும் காரணம்!

அமெரிக்காவில் தன்னை பலவந்தமாக கற்பழிக்க முயன்றவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இதையடுத்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அப்பெண் அடுத்த மாதம் விடுதலையாக இருக்கிறார்.


அமெரிக்க மாகாணம் டென்னிசி பகுதியில் வசித்து வருபவர் சின்டோயா  பிரவுன் 16 இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் சிறுவயதிலேயே நண்பர் ஒருவரால் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது பிரவுன் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜான் ஆலன் என்ற நபர் அப்பெண்ணை தனியே தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அழைத்துச் சென்று அவருக்கு உணவு அளித்ததோடு அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார் இன்னிலையில் ஆத்திரமடைந்த பிரவுன் அங்கிருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து அவரது பின் தலையில் சுட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திலேயே ஆலன் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தாமாகவே கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரண் அடைந்துள்ளார். 

இதையடுத்து அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது அந்நாட்டு சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது 51 வருடங்கள் ஆகும். இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பிறகு தற்போது விடுதலை அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவரது தண்டனையை குறைக்க சொல்லி அமெரிக்காவில் உள்ள மக்களும் மற்றும் திரை பிரபலங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவரது தண்டனையை குறைத்து அவரை விடுதலை செய்ய நிபந்தனை செய்துள்ளது. இந்நிலையில் விடுதலை பெற்றாலும் அது முழு விடுதலை ஆக கருதப்படமாட்டாது இனி வரும் 10 ஆண்டுகளுக்கு அவர் பிணை அலுவலரை அடிக்கடி சந்திக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு அப்பெண்ணை விடுதலை செய்துள்ளது.

மாதம் ஒருமுறை நீதிமன்ற வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கிற்கு வந்து செல்ல வேண்டும் இவ்வாறான பல நிபந்தனைகளையும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதையடுத்து அதை ஒப்புக் கொண்ட பின்னரே பிரவுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.