கற்பழிப்பு எல்லாம் ஒரு செய்தியா? கதறவிடும் குருமூர்த்தி!

பெண்களை கற்பழிப்பது என்பது உலகம் முழுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது, அதெல்லாம் ஒரு செய்தியா என்று கதறவிட்டிருக்கிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.


மதுரையில் துக்ளக் இதழின் 50வது ஆண்டுவிழா நடைபெற்ற நேரத்தில்தான் இப்படியொரு அரிய முத்து அவர் வாயில் இருந்து விழுந்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் கற்பழிப்பு நம் நாட்டை விட 80 மடங்கு அதிகம், அமெரிக்காவில் 30 மடங்கு அதிகம், ஆனால் அங்கு கற்பழிப்பு எல்லாம் ஒரு செய்தியே இல்லை. இந்தியாவில்தான் அதை ஒரு செய்தியாக்கி பரபரப்பை உருவாக்க்கிறார்கள் என்று சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியிருக்கிறார். 

மேலும் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பதற்கு காரணம், பெண்களுக்கான மரியாதையை குறைத்து உரிமையை அதிகப்படுத்த வேண்டும் என்று பேசுவதுதான் என்றும் குருமூத்தி கூறியுள்ளார்.

கற்பழிப்பின் தலைநகராக இந்தியா மாறிவிட்டது என்று ராகுல்காந்தி பேசியதை தாங்கமுடியாமல்தான் இப்படி பேசியிருக்கிறார் குருமூர்த்தி. நாட்டில் ஒரே ஒரு கற்பழிப்புகூட நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் பேசியிருப்பதை, இப்படி கொச்சை படுத்தியிருக்க வேண்டியதில்லை குருமூர்த்தி.

இதுவே வேறு யாராவது பேசியிருந்தால், பெண்ணுரிமை தாய்மார்கள் கையில் விளக்கமாறுடன் அடிக்கக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பேசியது பெரிய இடம் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் குருமூர்த்தியாச்சே. அப்படியே அடங்கிப் போயிட வேண்டியதுதான்.