நடிப்பதற்கு வாய்ப்பு தேடி அலையும் ரங்கராஜ் பாண்டே! தெறித்து ஓடும் இயக்குநர்கள்!

அஜித்குமாருடன் நேர் கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடித்தார் ரங்கராஜ் பாண்டே. அந்தப் படம் வெளியானதும், வரிசையாக ஏகப்பட்ட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.


அதனால், சினிமா தனக்கு சரிப்படாது என்று ரங்கராஜ் பாண்டே ஒதுங்கிவிட்டார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அவர் ஒவ்வொரு இயக்குநரையும் நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

சமீபத்தில் அஜித் படத்தை இயக்கிய வினோத் ஒரு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அந்த பார்ட்டிக்கு வந்த ரங்கராஜ் பாண்டே அவரிடம் நேரடியாகவே, ‘அடுத்த படத்தில் எனக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு வேண்டும். எப்படிப்பட்ட கேரக்டர் என்றாலும் நடிக்கிறேன்’ என்று சொன்னதுடன், பல்வேறு இயக்குநர்களுக்கும் பரிந்துரை செய்யச் சொல்லியிருக்கிறார்.

இதை எதிர்பார்க்காத வினோத் அப்போதைக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாலும், இனிமேல் ரங்கராஜ் பாண்டே கண்களில் படுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேபோன்று பல்வேறு இயக்குநர்களுக்கும் போன் செய்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். நல்ல கேரக்டர் இருந்தால் நாங்களே அழைக்கிறோம் என்று சொல்வதை கண்டுகொள்ளாமல், அவ்வப்போது போன் செய்து ஞாபகப்படுத்துகிறாராம்.

ஆசைப்படுறாரே, குடுங்கப்பா. அப்பன்னாத்தானே நல்ல நடிகராகி, அப்புறம் அரசியல்ல இறங்கி தமிழக முதலமைச்சர் ஆக முடியும்.