ரங்கராஜ் பாண்டே பக்காவான பா.ஜ.க. அனுதாபி, எப்படியாவது மோடிக்கு பிரசாரம் செய்வதுதான் அவரது பாணி என்று சொல்லப்பட்ட வந்த விவகாரங்களை பலரும் நம்பாமலே இருந்தார்கள்.
ரங்கராஜ் பாண்டே வேஷம் கலைஞ்சுபோச்சு! கொடுத்த காசுக்கு மேல கூவுகிறார்!

அவர்கள் அனைவரிடமும், நான் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.தான் என்று அழுத்திச் சொல்லி புரிய வைத்திருக்கிறார் பாண்டே.அவர் நடத்திவரும் சாணக்யா ஆன்லைன் சேனலில் கிருஷ்ணருக்காக் கொடி பிடித்து, தன்னுடைய முகமூடியைக் கழட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதோ அவர் எழுப்பியிருக்கும் கேள்விகள். கிருஷ்ணர் குறித்து வீரமணி கூறிய கருத்துகளுக்கு விமர்சனம் என்று தொடங்கி ஸ்டாலின் எதிர்ப்பை தீவிரமாக காட்டியிருக்கிறார்.
இந்துக்கள் அமைதியாக இருப்பதனால் இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள். அதற்கு சட்டமும் வலுவாக இல்லாததால் தப்பி பிழைக்கிறீர்கள்? மேலும் 6 வயது கிருஷ்ணன் உடைகளை எடுத்தது தவறென்றால். மகள் வயது பெண்ணை, குழந்தை பிறந்த பிறகு திருமணம் செய்வது மூன்று பொண்டாட்டிகள் காட்டிக்கொள்வது உங்கள் பாஷையில் தவறாக தெரியவில்லையே? ஏன் இப்படி ஒரு மதத்தினை மட்டும் எதிர்க்கிறீர்கள்.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் நயன்தாரா குறித்து பேசியதற்காக ராதாரவியை இடைநீக்கம் செய்திருக்கிறீர்கள் இதே இந்துக்கடவுள்களை அவமானப்படுத்தி பேசி இருக்கும் வீரமணியின் அறிக்கைக்கும் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இதனை ஆதரிப்பதாகதானே பொருள் தரும்? என்று அமைதியான முறையில் கேள்விகளின் மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
முதல்முறையாக பாண்டே அவரது உண்மையான குணத்தை வெளிப்படையாக காட்டியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.வுக்காக பணியாற்றுகிறார் என்பது உண்மைதான் என்பதை நிரூபித்துவிட்டார் பாண்டே.