பரமக்குடி அருகே இன்னொரு கீழடி..! 2600 ஆண்டு பழமையான பானை, எழும்புக்கூடு! பாம்பு விழுந்தானில் எழுச்சி பெறும் வைகை நாகரீகம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கோயில் மைதானத்தில் பழங்காலத்தில் பயன்படுத்திய சுடுமண் ஓடுகள் கிடைக்கப் பெற்றனர்.


பாம்புவிழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோயில் மைதானத்தில் நிலப்பகுதியைச் சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு தென்பட்டது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சுடுமண் உறை கிணறு கண்டறியப்பட்டதற்கான காரணம் மூலவைகை பகுதியான வருசநாடு மலைப்பகுதி தொடங்கி கடல் பகுதியான கச்சதீவு வரை வைகை நாகரிகம் பரவியிருக்கலாம் என தெரிகிறது. கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த பொருள்களைப் போன்றே பாம்புவிழுந்தான் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களும் உள்ளன. எனவே தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறையினர் முறையான ஆய்வுகளை நடத்தினால் தமிழர்களின் பழைமையான வாழ்க்கை வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுக்குச் சான்றாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நகரமைப்புகள், மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரை அருகில் அழகன்குளத்தில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்விலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்தன. மேலும் கிழக்குக் கடற்கரை பகுதியின் துறைமுக நகரமாக விளங்கிய தொண்டிப் பகுதியிலும் பழைமைமிக்க தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.