சாலையில் உருண்டு புரண்டு மாணவ, மாணவிகள் அங்கபிரதட்சணம்! மிரள வைக்கும் காரணம்!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மக்கள் பணத்தை கொள்ளையடிப்போரால் உருவாக்கபட்ட அவலமாக சிதிலமடைந்து கிடக்கிறது.


சாலையை விரைந்து சீரமைக்கக் கோரி மக்களும் பள்ளி மாணவர்களும் மக்களும் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கமுதியை அடுத்த கோடாங்கிபட்டி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அரசியல்வியாதிகள், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்ட சமுதாயக் கொள்ளையர்களால் நிதி கொள்ளையடிக்கப்பட்டது.

இதனால், ஆரோக்கியக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையாய் 5 ஆண்டுகளிலேயே எலும்பும் தோலுமாகி விட்டது அந்தச்  சாலை. சாலையின் பல்வேறு இடங்களில் கற்கள் பெயர்ந்து  பயன்படுத்த முடியாத அளவுக்கு அந்தச் சாலை படுமோசமாக காட்சியளிக்கிறது.

இதனால் வெளியூர்களுக்கு சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருடனிடமே திருட்டு குறித்து புகார் அளிப்பது போல சாலை குறித்து மக்கள் தொடர்புடைய அதிகாரிகளிடமே பலமுறை மனு அளித்தனர். ஆனால் வழக்கம் போல அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்த சாலையில் பள்ளி மாணவர்கள் படுத்து, உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.